தனிமை - ஒரு ஆசான்:
----------------------------------
தனிமை .. ஒரு மனிதனுக்கு நிறைய கற்று கொடுக்கிறது .. அவன் தன்னையே முழுதாய் அறிய ஒரு வாய்ப்பாக அமைகிறது .. அவனுடைய பொழுது போக்குகளை அவனுக்கு தெரிய படுத்துகிறது .. அவன் வாழ்வில் சுக துக்கங்களை ஒரே மாதிரி எதிர் கொள்ள அவனை தயார் செய்கிறது..பிறரை விட தன் மனதே அவனுக்கு உற்ற தோழன் என்று புரிய வைக்கிறது..
தனிமை.. ஒவ்வொருவருக்கும் இணையில்லா உன்னத ஆசான்..
தனிமை - ஒரு புதையல்:
--------------------------------------
நீ தனியாக இருக்கும் போது தான் நீயாக இருக்கிறாய் .. மற்ற நேரங்களில் உன்னை சுற்றி உள்ளவர்களுக்காக நடித்து கொண்டு இருப்பாய் .. உன்னை கண்டு கொள்ள யாரும் இல்லாத போது தான் நீ உன்னை தேடி அறிவாய் ... எவன் ஒருவன் தான் தனியாக இருக்கும் போது தன் மனதுக்கு கட்டுப்பட்டு நல்லவனாக இருக்கிறானோ அவன் தான் உண்மையிலேயே உன்னதமானவன் ...
No comments:
Post a Comment